முகப்பு
செய்திகள்

மார்க் ஆண்டனி வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜூலை 2023, 5:26 pm IST
பகிர்:

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments