முகப்பு
செய்திகள்

இந்திய அளவில் முதலிடம் பிடித்த வீரன்!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘வீரன்’ ஓடிடி தளத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘வீரன்’ ஓடிடி தளத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ’மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வீரன்’. இப்படம் ஜூன் 2 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது.

இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி உடன் அதிரா ராஜ், வினய் ராய், சசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

மேலும், வீரன் திரைப்படம் ஜூன் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படம் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.