முகப்பு
செய்திகள்

மறுவெளியீட்டிலும் வென்ற வேட்டையாடு விளையாடு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்து வருகிறது.

Updated On : 4 ஜூலை 2023, 3:20 pm IST
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்து வருகிறது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிக்க: தனுஷ் - 50 புதிய அப்டேட்

Advertisement

Advertisement

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன்  வேட்டையாடு விளையாடு படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியானது.

சென்னையில் வெளியான திரைகளில் முதல்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில், இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments