சின்னத்திரை படப்பிடிப்பு தளத்தில் உருவாகும் படம்!
சீரியல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுவரும் சின்னத் திரை நடிகருக்குச் சொந்தமான இடத்தில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
சீரியல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுவரும் சின்னத் திரை நடிகருக்குச் சொந்தமான இடத்தில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இடத்தில் தற்போது திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதுதான் வளர்ச்சி என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் சின்னத் திரை நடிகர் ராஜ்கமலுக்கு சொந்தமான படப்பிடிப்புத் தளம் செயல்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் சின்னத்திரை தொடர்கள், இணைய தொடர்கள், நேர்காணல்கள் போன்றவை எடுக்கப்பட்டு வந்தன.
Advertisement
Advertisement
இதனால் இந்த படப்பிடிப்புத் தளம் எப்போதும் பிரபலங்களின் வருகை நிறைந்ததாகவே காணப்படுகிறது. சன் தொலைக்காட்சியின் செவ்வந்தி, ராதிகா நடித்த சித்தி -2, பொன்னி, எதிர்நீச்சல், ஈரமான ரோஜாவே -2 போன்ற தொடர்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது வெள்ளித் திரை சினிமாவையும் உருவாக்கும் இடமாக இத்தளம் மாறியுள்ளது. நடிகர் அபி சரவணன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை இங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படபிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் அபி சரவணன் ஏற்கெனவே டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர்.
சின்னத்திரை தொடர்கள் எடுக்க உருவாக்கப்பட்ட இடத்தில் தற்போது வெள்ளித் திரை சினிமாவும் உருவாகிறது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.