ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!
உயிர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது...
நடிகர் ரோஷன் மாத்யூ நடிப்பில் உருவான உயிர் திரைப்படம் பிரபல ஓடிடியில் வெளியானது.
இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைப்படம் உயிர். நாயகனாக நடிகர் ரோஷன் மாத்யூ காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது. இந்த நிலையில், உயிர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
அண்மை காலமாக காவல்துறை சார்ந்த திரைப்படங்கள் மலையாளத்தில் அதிகம் உருவாகி வருகின்றன. சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சில படங்கள் அழுத்தமான விவாதங்களையும் உருவாக்குகின்றன. உண்மைச் சம்பவம் என்பதால் இப்படம் கூடுதலான கவனத்தைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
The movie Uyir, starring actor Roshan Mathew, was released on a popular OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.