கமல் - 233 கதை விவசாயம் தொடர்பானது அல்ல: ஹெச்.வினோத்
கமல்ஹாசன் நடிக்கும் 233 -வது படத்தின் கதை விவசாயத்தை பின்னணியாகக் கொண்ட கதை இல்லை என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
இதற்காக, கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றிற்கு பதிலளித்த் இயக்குநர் ஹெ.வினோத் இத்தகவலை மறுத்துள்ளார். மேலும், ’இப்படத்திற்கு கமல்ஹாசன் சொன்ன கதையே நன்றாக இருந்ததால், நான் திரைக்கதை மட்டும் எழுதி இயக்கவுள்ளேன்.’ என அவர் தெரிவித்துள்ளார்.
And it begins…#RKFI52 #KH233
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE
— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.