ஜெயிலர் படத்தின் 2வது பாடல் வெளியானது!
ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் பாடலான 'ஹுக்கும்' வெளியானது.
ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் பாடலான 'ஹுக்கும்' வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார் வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வருகிறது புதிய தொடர்: விரைவில் நிறைவடையவிருக்கும் பிரபல சீரியல்!
ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், 'அலப்பர கிளப்பரோம்' எனத் தொடங்கும் 2வது பாடல் வெளியானது.
இப்பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.