FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கும் ஜீவா!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:12 am
பகிர்:

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். 

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்க உள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் சமீப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய தோல்விகளையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments