முகப்பு
செய்திகள்

ஹாலிவுட் நடிகரை மணக்கிறார் எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூலை 2023, 12:26 pm IST
பகிர்:

தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட சில படங்களில் நடித்தார்.

பின், மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Advertisement

தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான  எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார். இருவரும் இந்தியாவுக்கு இணைந்தே வருகிறார்கள். இங்கு எமி ஜாக்சனின் படப்பிடிப்புகளிலும் அவர் குழந்தை ஆண்ட்ரியாஸூடன் கலந்துகொள்கிறார்.

மகனுடன் எமி ஜாக்சன்

இந்த நிலையில், எமி ஜாக்சன் இஸ்டாகிராமில், “எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் இணைந்துள்ளதால் நாங்கள் இருவரும் சிறந்த சூழலில் உள்ளோம். அதனால், திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறோம்.  நான் நடித்துள்ள தமிழ்ப் பட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. என் மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன். அவனுக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.