முகப்பு
செய்திகள்

என் முந்தையப் படங்களைப்போல் கேப்டன் மில்லர் இருக்காது: அருண் மாதேஸ்வரன்

கேப்டன் மில்லர் குறித்து சில தகவல்களை அப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.

Updated On : 28 ஜூலை 2023, 4:12 pm IST
பகிர்:


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில், நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

டீசர் வெளியாவதற்கு முன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனிடம் இப்படம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என் முந்தையப் படங்களைப்போல் அதிகமான வன்முறைக் காட்சிகள் கேப்டன் மில்லரில் இருக்காது. எல்லாரும் பார்க்கும் படியாகவே எடுத்திருக்கிறேன். இது உண்மையான கேப்டன் மில்லர் கதை அல்ல. ஆனால், ஒரு போராளியின் கதையாகவே உருவாகியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments