ஆதிபுருஷ்: 3வது நாளில் ரூ.340 கோடி வசூல்- நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 3 நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். சீதாவாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: இணையத்தில் தீயாய் பரவும் தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள்!
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சிம்பு, விஷால் உள்பட 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு?
உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் 3வது நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் பிரபாஸ் இதனை பகிர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் மீண்டும் உச்சத்தை நிலைநிறுத்தியுள்ளது என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
பிரபாஸ் ரசிகர்கள் பாக்ஸாபிஸ் கிங் என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் காலி தியேட்டரில் எப்படி இவ்வளவு வசூல் என கிண்டல் செய்து வருகின்றனர்.