முகப்பு
செய்திகள்

ஹரிஷ் கல்யாணின் புதிய படம் குறித்த அப்டேட்!

ஹரிஷ் கல்யாணின் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 23 ஜூன் 2023, 2:27 pm IST
பகிர்:

ஹரிஷ் கல்யாணின் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

தோனி தயாரிப்பில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments