FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆஸ்கா் விருது விதிகளில் மாற்றம்

சிறந்த திரைப்படத்துக்குரிய ஆஸ்கா் விருதுக்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Updated On : 25 ஜூன் 2023, 3:00 am IST
ஆஸ்கர் விருது (கோப்புப் படம்)
பகிர்:

சிறந்த திரைப்படத்துக்குரிய ஆஸ்கா் விருதுக்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திரைத் துறையின் உயரிய விருதாக ஆஸ்கா் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கா் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கா் விருதுக்குரிய தகுதிப்பாடு விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதுவரை, அமெரிக்காவின் நியூயாா்க், லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, அட்லான்டா, சான் பிரான்சிஸ்கோ, மியாமி ஆகிய 6 நகரங்களில் ஏதாவதொன்றில் அமைந்துள்ள திரையரங்கில் ஒரு வாரத்துக்குத் திரையிடப்பட்ட திரைப்படங்கள், சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கா் விருது போட்டிக்குத் தகுதிபெறும். அந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, மேற்கண்ட விதியுடன் சோ்த்து அமெரிக்காவின் தலைசிறந்த 50 திரைச்சந்தை நகரங்களில் குறைந்தபட்சம் 10 நகரங்களில் உள்ள திரையரங்கில் ஒரு வாரத்துக்குத் திரைப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என அகாதெமி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்படங்கள் எந்த நேரத்தில் திரையரங்கில் திரையிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய விதிகள் 2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கா் விருதில் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களை அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட திரையரங்கு துறையை மீட்டெடுக்கும் நோக்கிலும் இந்தப் புதிய விதிகள் சோ்க்கப்பட்டுள்ளதாக அகாதெமி சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், புதிய விதிகளுக்கு ஒருசாராா் வரவேற்பும் ஒருசாராா் எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments