முகப்பு
செய்திகள்

ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனத்தை வைத்திருக்கக்கூடாது: உதயநிதி ஸ்டாலின் வருத்தம்! 

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனத்தை வைத்திருக்கக்கூடாது என உதயநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜூன் 2023, 10:49 am IST
பகிர்:

2011இல் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்திருநதார்கள். ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு வசனம் பேசியிருப்பார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக உருவாகியிருக்கும் மாமன்னன் படம் ஜூன் 29ஆம் நாள் வெளியாக உள்ளது. இதில் வடிவேலு, ஃப்கத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

மாமன்னன் படத்தின் புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் உதயநிதி இது குறித்து கூறியதாவது: 

ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்த வசனத்தை நான் தயாரிக்கும் படத்தில் வைத்திருக்கக் கூடாது. அப்போது எனக்கு அசியல் புரிதல் கிடையாது. ஆனால் அப்போதே சூர்யா சார் இதை நீக்கிவிடலாம் என்று கூறினார். நான்தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. படிக்க படிக்க, அரசியலில் பங்கேற்க எனக்கு அரசியல் புரிதல் மேம்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.