'அழகியே..’ இணையத்தைக் கலக்கும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’மகாநதி’ திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநாயகியாகவும் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.