நான் எந்தப் படத்தையும் காப்பியடிக்கவில்லை: அட்லி
இயக்குநர் அட்லி தான் எந்தப் படத்தினையும் காப்பியடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் விஜய், நடிகர் ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நள்ளிரவில் வெளியான ஜோதிகா-மம்மூட்டியின் ‘காதல்’ பட டிரைலர்!
Advertisement
Advertisement
ராஜா ராணி படத்தில் இருந்து கடைசியாக வெளியான ஜவான் படம் வரை அட்லி பல படங்களை காப்பியடித்து எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் சட்ட ரீதியாக எதுவும் நிரூபணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், “நான் எந்தப் படங்களையும் காப்பியடித்து எடுக்கவில்லை. அப்படி காப்பியடித்து இவ்வளவு வசூல் செய்யும் படங்களை எடுக்க முடியுமா? அப்படியானால் எல்லோரும் இதை எளிமையாக செய்து விடுவார்களே... அப்படியில்லை. நேர்மையற்ற உழைப்பினால் யாரும் எதையும் சாதிக்க முடியாது.
இதையும் படிக்க: நன்றி பொண்டாட்டி: நடிகர் சூர்யாவின் வைரல் பதிவு!
இப்படித்தான் மெர்சல் படம் காப்பியென ஒருவர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிபதி இருவரது படங்களின் ஸ்கிரிப்ட்டை ஆராய்ந்து அப்படி எதும் இல்லை எனக் கூறி வழக்கு பதிந்தவருக்கு அபராதம் வித்தித்தார். என்னை இன்ஸ்பையர் செய்த பல படங்களின் பாதிப்பு என்னுடைய படங்களில் இருக்கலாம் அதற்காக நான் காப்பியடித்தேன் எனக் கூற முடியாது. என்னுடைய படங்களுக்கு நான் கடுமையாக உழைத்து எழுதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.