ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்!
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.
எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக வலம் வருகிறார்.
தற்போது, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க | ஓடிடியில் சிவ ராஜ்குமாரின் கோஸ்ட்! எங்கே? எப்போது?
Advertisement
Advertisement
இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கௌரவ தோற்றத்தில் 10 நிமிடம் இடம்பெறும் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளதாக இயக்குநர் கோகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை வெளியான தன் படங்களில் இதுவே என் சிறந்த படம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.