நள்ளிரவில் வெளியான ஜோதிகா-மம்மூட்டியின் ‘காதல்’ பட டிரைலர்!
நடிகை ஜோதிகாவும் நடிகர் மம்மூட்டியும் இணைந்து நடித்துள்ள படத்தின் டிரைலர் நள்ளிரவில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது.
ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது.
இதையும் படிக்க: நடிகராகும் இயக்குநர் சீனு ராமசாமி!
Advertisement
Advertisement
படத்திற்கு ‘காதல் தி கோர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இந்நிலையில் நள்ளிரவில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இது குறித்து, “ஏன் நள்ளிரவில் வெளியானது புரியவில்லை. ஆனால் எதிர்பாராத மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படம் நவ.23ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.