ஜென்சன் ஹுவாங் விலகல்! ரூ. 150 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது என்விடியா!
ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதால், ரூ. 150 லட்சம் கோடி மதிப்பிலான சந்தை மதிப்பை என்விடியா நிறுவனம் இழந்துள்ளதைப் பற்றி...
ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதால், சுமார் 1.6 டிரில்லியன் டாலர் (ரூ. 150 லட்சம் கோடி) மதிப்பிலான சந்தை மதிப்பை என்விடியா நிறுவனம் இழந்திருக்கிறது.
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிறுவனத்தின் முதல் தலைவராக ஹார்வி சி. ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது.
ஜென்சன் ஹுவாங் பதவி விலகிய தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் என்விடியா பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்தன.
கடந்த ஆறு வாரங்களில் மட்டும் என்விடியாவின் பங்குகள் சுமார் 1.6 டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 150 லட்சம் கோடி வரையிலான சந்தை மதிப்பை என்விடியா நிறுவனம் இழந்திருக்கிறது.
Nvidia's market capitalisation may have fallen even more than the $1.6 trillion or 4.37 % it lost on news of the scandal. That's a third of India's GDP at Rs 150 lakh crore!