முகப்பு
செய்திகள்

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் - கமல்: வைரல் புகைப்படம்

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சந்தித்தக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 23 நவம்பர் 2023, 4:17 pm IST
பகிர்:

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சந்தித்தக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரசாத் ஸ்டூடியோவில் ரஜினி 170, இந்தியன் - 2 திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரஜினியின் பாபா, கமலின் பஞ்சதந்திரம் படப்பிடிப்பிற்கு பிறகு, ரஜினி - கமல் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். 

Advertisement

Advertisement

கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் பெரும் பொருள்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

தற்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments