மேக்கேதாட்டு அணையின் பயன்: தமிழக அரசுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக அரசு!
மேக்கேதாட்டு அணையின் பயன் குறித்து விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் கூறியது குறித்து...
தமிழ்நாட்டுக்கு மேக்கேதாட்டு அணையின் பயன் குறித்து தமிழக அரசின் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது, "காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு 177 டிஎம்சி தண்ணீருக்கான உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. அது நம் கடமை. அணையைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவது நமது உரிமை. அந்த உரிமையை நாம் பாதுகாப்போம். அரசியலில் போட்டி இருக்கலாம்; மாநில வளர்ச்சியில் ஒத்துழைப்பு வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் (தமிழ்நாடு) எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை எழுப்பும். காங்கிரஸ் கண்டிக்காவிட்டால் திமுக கண்டிக்கும். திமுக கண்டிக்காவிட்டால் அதிமுக கண்டிக்கும். இதில் அனைவரும் கண்டனம் தெரிவிக்கக் கூடும்.
அவர்களின் பிரதிநிதிகள் கர்நாடகம் வரட்டும். மேக்கேதாட்டு அணை அவர்களுக்கு எப்படி உதவிகரமானதாக இருக்கும் என்பதை நான் இங்கு விளக்குவேன்" என்று தெரிவித்தார்.