யூடியூபில் மறுஒளிபரப்பாகும் 2 பிரபல தொடர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த இரு தொடர்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த இரு தொடர்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
விஜய் தொலைக்காட்சி தனது யூடியூப் வலைதளத்தில் இரு தொடர்களையும் மறுஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இளம் தலைமுறை ரசிகர்கள் மத்தியில் கடும் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான பாரதி கண்ணம்மா தொடரை விஜய் தொலைக்காட்சி தனது யூடியூப் தளத்தில் மறுஒளிபரப்பு செய்யவுள்ளது.
Advertisement
Advertisement
பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகத்தை விட, முதல் பாகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உண்டு. தற்போது அந்த ரசிகர்களைக் கவரும் வகையில், மீண்டும் பாரதி கண்ணம்மா தொடர் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இதேபோன்று விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரும் விஜய் தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஆம் பாகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.