சென்னை திரும்பிய அஜித்.. என்ன ஆனது விடாமுயற்சி?
விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் குமார் திடீரென சென்னை திரும்பியுள்ளார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தவறு செய்வது மனித இயல்பு: த்ரிஷா
Advertisement
Advertisement
இந்நிலையில், அஜித்துக்கான முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஓய்விற்காக அவர் சென்னை திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபையில் நடக்க உள்ளதாகவும் தகவல்!
Actor #AK is back in Chennai..
He was shooting for #VidaaMuyarchi in Azerbaijan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.