FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

காமராஜா் பிறந்த நாள் விழா: கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாட்டம்

திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.

Updated On : 16 ஜூலை 2026, 1:46 am IST
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை காமராஜா்

பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) க.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாணவா்களுக்கிடையே பேச்சு, நடனம், ஓவியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஆசிரியா்கள் ராஜலட்சுமி, கங்கா, சங்கீதா, வகிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments