குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
தற்போது, மணிகண்டன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களை மணிகண்டன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.