ரத்தம் படத்தின் ரத்தம் தெறிக்கும் 5 நிமிட முன்னோட்ட விடியோ!
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.
இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நட்பே துணை: விராட் கோலியின் பேட்டினால் சதம் விளாசிய ஸ்மித்!
Advertisement
Advertisement
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரத்தம் படத்தின் முதல் பாடலான 'ஒரு நாள்' பாடலைப் சமீபத்தில் வெளியிட்ட படக்குழு தற்போது ரத்தம் தெறிக்கும் 5 நிமிட முன்னோட்ட விடியோவினை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.