FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போர்நிறுத்தம் முறிவு? காஸாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கை! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

இஸ்ரேலிய படைகள் காஸாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது குறித்து...

இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயமடைந்த பாலஸ்தீன சிறுவன்... - AP
பகிர்:

காஸாவில் புதியதாக ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போரில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், மத்திய காஸா பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக, புதன்கிழமை (நவ. 18) மாலை இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் இயங்கும் தங்கள் படைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய காஸாவில் வசித்து வரும் பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், காஸாவின் அகதிகள் முகாம்களுக்கு அருகிலுள்ள சலாஹ் அல்-தின் தெருவில் இஸ்ரேலிய படைகளின் டாங்கிகள் ஊடுறுவி வருவதாகவும், அப்பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, காஸாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,710 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 2025 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகான இஸ்ரேலின் தாக்குதல்களில் மட்டும் 1,658 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Israeli military has announced that it has launched new military operations in Gaza.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.