FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 5% உயர்வு!

நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்காக ரூ. 5,500 கோடி வரை நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

31 வினாடிகள் முன்பு
ஸ்பைஸ்ஜெட் - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிதி நிலையை வலுப்படுத்த ரூ. 5,500 கோடி வரை நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில், ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 64.65 லட்சம் பங்குகள் வர்த்தகமான நிலையில், இந்த பங்கு 4.95% உயர்ந்து, அதன் அப்பர் சர்க்யூட் வரம்பான ரூ. 9.97 ஆக நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர் குழுக் கூட்டத்தில், புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பாக நடைபெற்று வரும் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் குறித்து குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்தவும், புத்துயிர் பெறச் செய்ய ரூ. 5,500 கோடி வரை நிதி திரட்டும் திட்டத்திற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவாக இறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வாரியம் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை ரூ. 2,000 கோடியிலிருந்து ரூ. 7,500 கோடியாக உயர்த்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

வான்வெளி கட்டுப்பாடுகள், செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், மிகவும் சவாலான சூழலில் இயங்கி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

summary

Shares of SpiceJet jumped nearly 5 per cent on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.