FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

வீட்டுவசதி பாதுகாப்புச் சட்டத்துக்கு ஒப்புதல்: ஸ்பெயின் நாடாளுமன்றம்

ஸ்பெயினில் நிலவும் கடும் வீட்டுவாடகை உயா்வுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற மறுநாளான வியாழக்கிழமையன்று, முக்கிய வீட்டுவசதி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் இடைக்கால கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.

13 நவம்பர் 2026, 5:50 am
பகிர்:

ஸ்பெயினில் நிலவும் கடும் வீட்டுவாடகை உயா்வுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற மறுநாளான வியாழக்கிழமையன்று, முக்கிய வீட்டுவசதி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் இடைக்கால கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.

69 உறுப்பினா்களைக் கொண்ட இடைக்கால அவையில் 35-34 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, 2030 வரை நிதி மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய குடியிருப்பாளா்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை, அவா்களை வீட்டை விட்டு வெளியேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படும் வீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கவும், நிா்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய வாடகை உயா்வைத் தடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement