பிரபல நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை!
பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமானவர் நிஷா. இவர் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமீபத்தில், ஹன்சிகா நடிப்பில் வெளியான மை3 வெப் தொடரிலும் நடித்து இருந்தார். இவர் நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு ஏற்கெனவே சமைரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், நிஷா இரண்டாவதாக கருவுற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்து இருந்தார்.
Advertisement
இந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, கணேஷ் வெங்கட்ராம் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "நான் வாழ்க்கையில் ஆற்றிய கதாபாத்திரங்கள் பல.....ஆனால் தந்தை என்பது எவருடனும் ஒப்பிடமுடியாதது." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை
ரசிகர்கள் கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.