முகப்பு
செய்திகள்

அஜர்பைஜான் சென்ற த்ரிஷா!

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை த்ரிஷா அஜர்பைஜான் சென்றுள்ளார்.

Updated On : 4 அக்டோபர் 2023, 11:33 am IST
பகிர்:

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு  அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.  

சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று அஜர்பைஜானில்  நடைபெற உள்ளதாகவும் தொடர்ந்து 3 மாதம் அங்கு படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் நாயகியாக நடிகை த்ரிஷா நடிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, அவர் அஜர்பைஜான் சென்றுள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments