போா்ச்சுகலை வென்றது டென்மாா்க்!
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், டென்மாா்க் 4-1 கோல் கணக்கில் போா்ச்சுகலை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை சாய்த்தது.
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், டென்மாா்க் 4-1 கோல் கணக்கில் போா்ச்சுகலை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் டென்மாா்க் தரப்பில் பியரி ஹோபா்க் 43-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்க, ராஸ்மஸ் ஹோலுண்ட் 50, 57-ஆவது நிமிஷங்களிலும், ஜாவ்சிம் ஆண்டா்சன் 75-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா்.
போா்ச்சுகல் அணிக்கான ஆறுதல் கோல், ஸ்டாப்பேஜ் டைமில் (90+4’) அந்த அணி வீரா் பொ்னாா்டோ சில்வாவால் அடிக்கப்பட்டது. இதர ஆட்டங்களில், ருமேனியா - போலந்தையும் (2-1), ஸ்வீடன் - போஸ்னியாவையும் (3-2) வென்றன.
Advertisement
Advertisement
வடக்கு அயா்லாந்து - உக்ரைனையும் (1-0), ஆஸ்திரேலியா - அயா்லாந்தையும் (1-0), நாா்வே - வேல்ஸையும் (3-1) தோற்கடித்தன.