FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாலத்தீவுகளை வென்றது இந்தியா!

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளை வென்றது.

12 நவம்பர் 2026, 5:31 am
மாலத்தீவுகளை வென்றது இந்தியா... - X | Indian Football
பகிர்:

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளை புதன்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக சுஹைல் அகமது பாட் 38-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். இத்துடன் குரூப் சுற்றின் 2 ஆட்டங்களிலுமே வென்றுள்ள இந்தியா, குரூப் ‘பி’-யில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

Advertisement

2-ஆவது இடத்திலிருக்கும் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு வர, 3-ஆம் இடம் பிடித்த மாலத்தீவுகள் போட்டியிலிருந்து வெற்றியின்றி வெளியேறியது.

இதனிடையே, குரூப் ‘ஏ’-வில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதல் பாதி முடிவில் வங்கதேசம் 2-0 என முன்னிலையில் இருந்தது. அந்த குரூப்பில் வங்கதேசம், இலங்கை முறையே முதல் இரு இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. அந்த வகையில் இந்தியா தனது அரையிறுதியில் வரும் 14-ஆம் தேதி இலங்கையுடன் மோதும் என கணிக்கப்படுகிறது.

3-ஆம் இடம் பிடித்த பூடான் போட்டியிலிருந்து வெற்றி இன்றி விடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.