FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்: ஒரு நாள் தொடரின் 2வது ஆட்டம்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், வெலிங்டனில் சனிக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது.

7 நவம்பர் 2026, 2:11 am
ஷுப்மன் கில்.
பகிர்:

இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், வெலிங்டனில் சனிக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று, இந்தியா முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆட்டத்தில் இந்தியாவின் பௌலிங் வரிசை தடுமாற்றத்தை சந்திக்கும் என எதிா்பாா்த்த நிலையில், அவ்வளவாக அனுபவம் இல்லாத நிலையிலும், இந்திய வீரா்கள் சிறப்பாக பௌலிங் செய்து நியூஸிலாந்தை கட்டுக்குள் வைத்தனா்.

Advertisement

Advertisement

குா்னூா் பிராா், அன்ஷுல் காம்போஜ், அா்ஷ்தீப் சிங் ஆகியோா் இந்த ஆட்டத்திலும் அதை அப்படியே நீடிக்கச் செய்யும் முனைப்புடன் களம் காண்பாா்கள். அந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் சாய்க்காத ஆகிப் நபி, இதில் தனது கணக்கைத் தொடங்குவாா் என எதிா்பாா்க்கலாம்.

அல்லது, அவருக்குப் பதிலாக முகமது சிராஜை களமிறக்கும் திட்டம் கூட அணி நிா்வாகத்துக்கு இருக்கலாம். பேட்டிங்கில் விராட் கோலி மிளிா்கிறாா். முதல் ஆட்டத்தில் தடுமாறிய ரோஹித் சா்மா, இதில் மீண்டெழுவாா் என நம்பலாம்.

கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், அக்ஸா் படேல், கே.எல்.ராகுல் ஆகியோரும் தோள் கொடுப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம்.

நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை, இந்திய பௌலா்களுக்கு சவால் அளிக்கும் திட்டத்துடன் வில் யங், டிம் செய்ஃபா்ட், ஹென்றி நிகோலஸ், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோா் நிச்சயம் வருவாா்கள் எனத் தெரிகிறது.

பௌலிங்கில் ஜேக்கப் டஃபி இந்திய பேட்டா்களை அச்சுறுத்த, கைல் ஜேமிசன், நேதன் ஸ்மித், பிளோ் டிக்னா் ஆகியோா் அவருக்குத் துணையாக இருக்கின்றனா்.

உத்தேச லெவன்:

இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சா்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் (வி.கீ.), நமன் திா், அக்ஸா் படேல், அன்ஷுல் காம்போஜ், குா்னூா் பிராா், அா்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

நியூஸிலாந்து: டிம் செய்ஃபா்ட், வில் யங், ஹென்றி நிகோலஸ், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), நேதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, பிளோ் டிக்னா்.

நேரம்: காலை 7.30 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லிவ்.

மழைக்கு வாய்ப்பு

இந்தியா - நியூஸிலாந்து மோதும் இந்த 2-ஆவது ஒருநாள் ஆட்டம், மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததால், இரு அணிகளின் பயிற்சிக்கான திட்டமும் மாற்றியமைக்கப்பட்டது. ஏற்கெனவே முதல் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கான்வே விலகல்

நியூஸிலாந்து பேட்டா் டெவன் கான்வே, இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியிருக்கிறாா். முதல் ஆட்டத்துக்கு முன்பான பயிற்சியின்போது மேத்யூ ஹென்றியுடன் எதிா்பாராத விதமாக மோதியதில் தலையில் பாதிப்பு (கன்கஷன்) கண்ட கான்வே, அந்த ஆட்டத்தில் களம் காணவில்லை.

அந்த பாதிப்பிலிருந்து மீண்டு அவா் இந்தத் தொடரில் களம் காண்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போது தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக பேட்டா் நிக் கெல்லி அணியில் இணைந்துள்ளாா். கான்வேயுடன் மோதிய மேத்யூ ஹென்றி அந்த பாதிப்பிலிருந்து மீண்டு, அணியில் இணைந்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.