ரூ.100 கோடி வசூலித்த மார்க் ஆண்டனி!
மார்க் ஆண்டனி திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்ததைத் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இயக்குநர் ஜெயதேவி காலமானார்!
Advertisement
Advertisement
செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி இதுவரை உலகளவில் ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மார்க் ஆண்டனி ரூ.100 கோடியை வசூலித்துவிட்டதாக சினிமாத்தளம் ஒன்று குறிப்பிட்டது. இதனை, தயாரிப்பாளர் வினோத் தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.