முகப்பு
செய்திகள்

இந்திய சினிமாவில் முதன்முறை: ஜவான் வரலாற்று சாதனை! 

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1103 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Updated On : 7 அக்டோபர் 2023, 10:35 am IST
பகிர்:

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். 

இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த படமாக ஜவான் திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலகம் முழுவதும் 30வது நாளில் ரூ.1103.27 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஹிந்தி திரைப்படம் இவ்வளவு வசூலித்துள்ளதாக படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

ஆமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.2,024 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இது பெரும்பாலும்  (ரூ.1300 கோடி) சீனாவில் இருந்து வசூலித்து குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் முந்தையப் படமான பதான் ரூ.1050.30 கோடி வசூலித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.