நடிகர் ஜீவாவின் யாத்ரா 2: வெளியானது முக்கிய அப்டேட்!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் யாத்ரா 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.
இதையும் படிக்க: இந்திய சினிமாவில் முதன்முறை: ஜவான் வரலாற்று சாதனை!
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்க உள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!
படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியது. நடிகர் ஜீவா தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் சமீப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய தோல்விகளையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் முதல்பார்வை போஸ்டர் அக்.9ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.