இந்தியன் 2: டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்! (விடியோ)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துக்கு கமல் டப்பிங் செய்யும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
இதையும் படிக்க: லியோ பட விமர்சனத்தை பதிவிட்ட அனிருத்!
லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: லண்டனில் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படங்கள்!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துக்கு கமல் டப்பிங் செய்யும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஎஃப்எக்ஸ் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற லோலா விஎஃபெக்ஸ் நிறுவனத்தில் அதி நவீன விஎஃப்எக்ஸ் குறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு விடியோவினை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.