முகப்பு
செய்திகள்

நடிகர் நானியின் 31வது படம்!

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் 31வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Updated On : 21 அக்டோபர் 2023, 12:21 pm IST
பகிர்:

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன. 

நானியின் 30வது படமாக ஹாய் நான்னா படம் உருவாகிவருகிறது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடிக்கிறார்.

இந்நிலையில் நானியின் 31வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிப்பில் அடடே சுந்தரா படக்குழுவுடன் நானி மீண்டும் இணைகிறார்.

அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. அக்.23,24ஆம் தேதிகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments