விஜய் - 68 பூஜை விடியோ வெளியீடு!
விஜய் 68வது படத்தின் பூஜை விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 10 படங்கள்.. ரூ.2,200 கோடி வசூல்.. அசத்திய தமிழ் சினிமா!
இந்த நிலையில், விஜயதசமியை முன்னிட்டு விஜய் 68வது படத்தின் பூஜை விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.