முகப்பு
செய்திகள்

விக்ரம் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது!

விக்ரம் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

விக்ரம் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். தற்போது, பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விக்ரமின் 62வது படத்தை ஜூட் ஆண்டனி இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, நிவின் பாலி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு விக்ரன் 62 படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →