FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லியோ பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யானது: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யானதெனக் கூறியுள்ளார். 

Updated On : 30 அக்டோபர் 2023, 6:17 pm IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்ட நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.  

லியோ படம் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும் 2ஆம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் சரியாக இல்லையென விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிளாஷ்பேக் காட்சிகள் உண்மையானதில்லை போலியான ஒன்றெனக் கூறியுள்ளார். 

பிளாஷ்பேக் காட்சிகள் குறித்து நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: 

இருதயராஜ் (மன்சூர் அலிகான்) கதாபாத்திரம் லியோ பிளாஸ்பேக் கதையை கூறுவார். அவர் பொய்யாகக்கூட சொல்லியிருக்கலாம். அது அவரது பார்வையில் கூறப்பட்ட கதை. ஆரம்பத்தில் அவர் பேசும் சில வசனங்கள் இருந்தன. பின்னர் சுவாரசியத்துக்காக அந்த வசனங்களை நீக்கிவிட்டோம்.

அதில் ‘ஒரு கதையை யார் பார்வையில் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இது என்னுடைய பார்வை’ எனக் கூறுவார். இந்த வசனம் வந்தால் அடுத்த 20 நிமிடங்கள் முற்றிலும் பொய்யென பார்வையாளர்கள் எளிமையாக ஊகிப்பார்களென எடிட்டர் கூறியதால் அதனை நீக்கிவிட்டோம். லியோ எங்குமே தனது கதையை கூறவில்லை. அவர் கூறினால்தான் உண்மை தெரியும் எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments