முகப்பு
செய்திகள்

கமல்ஹாசனின் 4 அப்டேட்கள்!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படங்களின் அப்டேட்கள் விரைவில் வெளியாகின்றன.

Updated On : 31 அக்டோபர் 2023, 11:36 am IST
பகிர்:

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது. நடிப்பு மட்டுமல்லாமல் சிவகார்திகேயன், சிம்பு ஆகியோரை வைத்து புதிய படங்களைத் தயாரித்தும் வருகிறார். மணிரத்னம், ஹெச்.வினோத் ஆகியோர் படங்களில் நாயகனாகவும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக விடியோ நவ.3-ல் வெளியாகிறது. தொடர்ந்து,  நவ.8 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னமுடன் இணையும் படத்தின்  அறிமுக முன்னோட்ட விடியோ வெளியாக உள்ளது.

அதேநாளில், கமல் நடிக்கும் ‘கல்கி’ படத்தின் அவரின் தோற்றப் போஸ்டரும் வினோத் இயக்கத்தில் உருவாகும் கமல் - 233 படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமுக்கு முன் சினிமாவிலிருந்து விலகியிருந்த கமல்ஹாசன், தற்போது பல அப்டேட்களைக் கையில் வைத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.