தாய்லாந்து சென்ற விஜய் - 68 படக்குழு!
விஜய் 68வது படத்தின் படப்பிடிக்காக தாய்லாந்து சென்றுள்ளனர் படக்குழுவினர்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில், சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஒரு சிறிய காட்சியை எடுப்பதற்காக படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.
இதையும் படிக்க: 10 படங்கள்.. ரூ.2,200 கோடி வசூல்.. அசத்திய தமிழ் சினிமா!
முன்னதாக, விஜயதசமியை முன்னிட்டு வெளியான இப்படத்தின் பூஜை விடியோ ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.