தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை!
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ராஞ்சனா. இதுதான் தனுஷ் நடிப்பில் வெளியான முதல் பாலிவுட் படம்.
தமிழில் ’அம்பிகாபதி’ என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ரஜினியுடன் நடிக்கும் யாஷ்?
Advertisement
Advertisement
இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில், “சில படங்கள் நம் வாழ்வை மாற்றக்கூடியவை. ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். தற்போது, இப்படம் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி இதே கதையுலகத்துடன் தொடர்புடைய ’தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கிறேன். இந்தப் பயணம் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், நமக்கு ஒரு சாகசமாக இருக்கும்.” எனத் பதிவிட்டிருந்தார்.
ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய்யே இப்படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.