போலா ஷங்கர்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சிரஞ்சீவ் நடிப்பில் வெளியான போலா ஷங்கர் படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடித்து வெற்றி பெற்ற படம் வேதாளம். இதில் ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
வேதாளம் படத்தினை தெலுங்கில் ரீமெக் செய்து நடிகர் சிரஞ்சீவி நடித்தார். இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள். படம் கடந்த மாதம் ஆக.11ஆம் தேதி வெளியானது. படத்தினை இயக்கியவர் மேஹர் ரமேஷ்.
இதையும் படிக்க: ரோமன்சம் படத்துக்கும் ஆவேஷம் படத்துக்கும் சம்பந்தமுண்டு: நடிகர் செம்பன் வினோத்
Advertisement
Advertisement
ஜெயிலர் படத்தோடு வெளியான போலா ஷங்கர் படம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. ஜெயிலர் படத்திற்கு திரையரங்குகளில் அதிகரித்ததும் போலா ஷங்கர் படத்துக்கு குறைந்ததும் குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனத்துக்குள்ளான போலா ஷங்கர் வசூலிலும் பின்தங்கியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் போலா ஷங்கர் நெட்பிளிக்ஸில் செப்.15ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.