விஜய் 68: வெங்கட் பிரபு கூறிய தகவல் வைரல்!
விஜய் 68 படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.
விஜய் 68 படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் அப்பா-மகன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும் மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: உச்சத்தை தொடும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
இந்த நிலையில், விஜய் 68 படம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கேள்விக்கு, விரைவில் என்று தனது எக்ஸ் தளத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவு சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.