தனுஷ் இயக்கும் புது சீரியல்.. சிங்கப் பெண்ணே!
கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரையும் இயக்குகிறார்.
சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரையும் இயக்குகிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவ்வபோது புதிய தொடர்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தற்போது சிங்கப் பெண்ணே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சன் தொலைக்காட்சி வலைதளத்தில் இந்தத் தொடருக்கான அதிகாரப்பூர்வ முன்னோட்ட (புரோமோ) விடியோ வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதில் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிகை மனீஷா மகேஷ் நடிக்கிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த வெற்றித் தொடரான, கண்ணான கண்ணே-வை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரையும் இயக்குகிறார்.
இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் நேரம் மற்றும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. கண்ணான கண்ணே தொடர் மாலைநேரத்தில் ஒளிபரப்பான நிலையில், இந்தத் தொடரும் பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.