முகப்பு
செய்திகள்

யாரும் காணாத வெற்றி: ரூ.1000 கோடியை நெருங்கும் ஜவான்! 

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தின் 16வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு தெரிவித்துள்ளது. 

Updated On : 23 செப்டம்பர் 2023, 3:54 pm IST
பகிர்:

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். 

இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த படமாக ஜவான் திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் 16வது நாளில் ரூ.953.97 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன் யாரும் பார்த்திராத வெற்றி என படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.