முகப்பு
செய்திகள்

ரூ.1000 கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்! 

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Updated On : 25 செப்டம்பர், 2023 at 3:57 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:46 PM

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். 

இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த படமாக ஜவான் திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலகம் முழுவதும் 18வது நாளில் ரூ.1004.92 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வரலாறு படைத்த ஜவான் என ஷாருக்கானை கிங் மேக்கர் என குறிப்பிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து விடியோவை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.